band-aid

டொராண்டோ முழுவதும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்

2016 அல்லது அதற்கு முன்பு டொராண்டோவில் பிறந்த அனைவரும் COVID-19 தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள். டொராண்டோ முழுவதும் சிட்டி-ரன் நோய்த்தடுப்பு கிளினிக்குகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்யலாம்.

நவம்பர் 23 முதல், 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகள் உட்பட டொராண்டோவில் உள்ள அனைவருக்கும் COVID-19 தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவு செய்யும் சந்திப்புகள் இப்போது கிடைக்கின்றன. முன்பதிவு செய்யப்பட்ட சந்திப்புகள் மூலம் COVID-19 தடுப்பூசிகள், தகுதியான அனைத்து குழுக்களுக்கும் பின்வரும் ஐந்து நகரங்களில் நடத்தப்படும் சிட்டி-ரன் கிளினிக்குகளில் மட்டுமே கிடைக்கும்:

Metro Toronto Convention Centre
255 Front St W, Toronto, ON M5V 2W6

Woodbine Mall
500 Rexdale Blvd, Etobicoke, ON M9W 6K5

Cloverdale Mall
250 The East Mall, Toronto, ON M9B 3Y8

Scarborough Town Centre
300 Borough Dr, Scarborough, ON M1P 4P5

Mitchell Field Community Centre Gym
89 Church Ave, North York, ON M2N 6C9

தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய, 1-833-943-3900 எண்ணை அழைத்து, பின்பு 3 ஐ அழுத்தவும். இணைக்கப்பட்டவுடன், முன்பதிவு செய்யும் முகவரிடம் தமிழ் மொழியில் பேசும்படி கேட்டு, உங்கள் சந்திப்பை உறுதி செய்யலாம்.

முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களும், தகுதியுள்ள குழுக்களுக்கு மூன்றாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகளும் உள்ளன. தடுப்பூசி பற்றிய பிரச்சாரம் தொடரும் அதே நேரத்தில், கூடுதலான தடுப்பூசிகள் கிடைத்தவுடன், மாகாண அடிப்படையிலான முன்பதிவு அமைப்பின் படி, முன்பதிவு சந்திப்புகள் வெளியிடப்படும். எனவே உங்களால் தற்போது முன்பதிவு செய்ய முடியாவிட்டால், அவ்வபோது தொடர்ந்து சரிபார்க்கவும்.

தங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போட விரும்பும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு நகரம் முழுவதும் பல வாய்ப்புகள் உள்ளன. விரைவில் வரவிருக்கும் பள்ளி அடிப்படையிலான COVID-19 மொபைல் தடுப்பூசி கிளினிக்குகள் மட்டுமில்லாமல் டீம் டொராண்டோ மருத்துவமனை அல்லது சுகாதார அமைப்புகளால் உள்ளூர் மருந்தகங்களில் நடத்தப்படும் கிளினிக்குகள், உங்கள் முதன்மை மருத்துவர்கள் அல்லது குழந்தை நல மருத்துவர்கள் மூலம் நடத்தப்படும் கிளினிக்குகள் உள்ளிட்டவை இந்த வாய்ப்புகளில் அடங்கும்.

நான் ஏன் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்?

டொராண்டோவில் ஏற்கனவே லட்சக்கணக்கானவர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். இப்போது உங்கள் முறை. தடுப்பூசி செலுத்திக்கொள்வது பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது, மேலும் புதிய மாறுபாடு உட்பட COVID-19 தாக்கத்தில் இருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் மற்றும் நீங்கள் நேசிப்பவர்களையும் பாதுகாக்க தடுப்பூசியே சிறந்த வழி.

COVID-19 தடுப்பூசி 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு தடுப்பூசி போடுவது, கோவிட்-19 தொற்று மற்றும் அதிகம் பரவக்கூடிய அபாயம் உள்ள டெல்டா மாறுபாட்டிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும். அதே நேரத்தில் கடுமையான நோய் பாதிப்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, மூச்சுக்குழாய் மூலம் சுவாசம், மற்றும் இறப்பு ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கும். தடுப்பூசி பள்ளிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் மற்றும் குளிர் காலத்தில் மக்கள் வீட்டிற்குள் இருக்கும் போது, நேரடியாகக் கற்றல் மற்றும் செயல்பாடுகளைப் பாதுகாக்கும். தங்களை, தங்களின் குடும்பம், பள்ளி மற்றும் சமூகத்தைப் பாதுகாக்க உதவும் நோக்கத்தில் டொராண்டோ பொது சுகாதாரம் (TPH) அனைத்து பெற்றோர்களையும் பராமரிப்பாளர்களையும் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொள்கிறது.

எனவே அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருப்போம். அது மட்டுமின்றி, பள்ளிகள், வணிகங்கள், விளையாட்டு நிகழ்வுகள், உணவகங்கள் - மற்றும் பலவற்றை - திறந்திருப்போம்!

மேலும் தகவலுக்கு, toronto.ca/covid19 பார்வையிடுங்கள்

ஆதாரங்கள்: